இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல துடிக்கும் மக்கள்: வெளிவரும் புள்ளிவிபரம்
கடந்த மாதம் சுமார் 40 ஆயிரம் பேர் வெளிநாடு செல்லும் நோக்கில் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சரத் ரூபசிறி(Sarath Rupasiri) தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை வழங்கப்படுவது அதிகரித்துள்ள போதிலும், தொற்றுநோய் இல்லாத காலத்திலும் மாதத்திற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவை இடைநிறுத்தம், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டை திறந்தவுடன், பெருமளவில் மக்கள் வருவதாக குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சரத் ரூபசிறி தெரிவித்தார்.
இந்நிலையில் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு நாள் சேவையின் கீழ் 15,889 கடவுச்சீட்டுகளும், பொது சேவையின் கீழ் 1999 கடவுச்சீட்டுகளும், வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு 4251 கடவுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.
குறித்த 18 நாட்களில் 22139 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 18ம் திகதி முதல் தினமும் சுமார் 1,200 முதல் 1,400 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது நாட்டை விட்டு வெளியேறுவதில் எந்த சிறப்பு ஆர்வத்தையும் காட்டவில்லை என்றும் அவர் கூறினார்.
கிறீன்காட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும், கொரோனா வைரஸ் தொற்று நோயின் போது இலங்கைக்கு வந்த 200,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து புதிதாக வருபவர்களின் எண்ணிக்கையும் இந்தக் காலப்பகுதியில் கூடும் என கட்டுப்பாட்டாளர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், வெளிநாடுகளில் கல்வி பயிலும் மற்றும் வாழும் பிள்ளைகளை பார்ப்பதற்காகவும் நாடுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கடவுச்சீட்டு பெற்றிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சரத் ரூபசிறி கூறினார்.
நாடு முழுவதும் முடக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குறிப்பிட்ட துறைகளுக்கு அதிகளவான மக்கள் வருவதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.