எகிறும் தங்கம் விலையால் கவலையில் மக்கள்!
இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் தங்கம் விலையானது வரலாறு காணாதளவு உச்சம் தொட்டுள்ளது.
63 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
அந்தவகையில் 2025 ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிப்.5 ஆம் திகதி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு ரூ.63,000 என்ற விலையைத் தாண்டியது.
சென்னையில் கடந்த சனிக்கிழமை (பிப்.8-ஆம் திகதி) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், இன்று (பிப்.10-ஆம் திகதி) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.35-ம், சவரனுக்கு ரூ.280-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.52,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.