வைகுண்ட ஏகாதசி; பெருமாள் கோயில்களில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்று வரும் நிலையில் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் திருக்கோவில் வெகு விமர்சையாக சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி,பூதேவி சமேத வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
108 திவ்ய தேசங்களில் 59 வது திவ்யதேசமான திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வைத்திய வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்துவிடுவார்கள்.
எனினும் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க இந்தாண்டு பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்களின்றி சொர்க்கவாசலம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிநடைபெற்றது.