உலக மக்களை முட்டாளாக்கும் பழ நெடுமாறன்; கருணா சீற்றம்!(Video)
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக தமிழகத்தின் மூத்த அரசியவாதியும், விடுதலைபுலிகளுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்த பழ நெடுமாறன் கூறி இருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் அந்த தகவலை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்ததுடன் விடுதலைபுலிகளின் தலைவர் இறுதிப்போரில் மாண்டுவிட்டார் எணவும் ஆணித்தரமாக கூறியது.
அத்துடன் இறுதிப்போரை வழைநடத்தியவரும் முன்னாள் ஜானதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவும் விடுதலைபுலிகளின் தலைவர் தொடர்பில் பழநெடுமாறன் கூறிய கருத்தை நிராகரித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் தற்போது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா எனும் விராயக மூர்த்தி முரளீதரன் விடுதலைபுலிகளின் தலைவர் தொடர்பில் பழ நெடுமாறன் கூறியது பொய் என கூறியுள்ளார்.
அதோடு இறுதிபோரில் களத்தில் விடுதலைபுலிகளின் தலைவர் மரணம் அடைந்ததாக தெரிவித்த கருணா, பழ நெடுமாறன் விடுதலைபுலிகளின் தலைவர் உயிருடன் உள்ளதாக கூறி உலக மக்களை முட்டாளாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.