செவ்வாய்- வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுப்பது வாங்குவது கூடாதா!
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிறருக்கு பணம் கொடுத்து உதவுவதை தவிர்க்க வேண்டும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏன் இந்த நாட்களில் பணம் கொடுக்க கூடாது?
ஏனெனில் செவ்வாய் முருகப் பெருமாளுக்கும், வெள்ளி லட்சுமி தேவிக்கும் உள்ள நாட்களாகும். இந்த இரண்டு நாட்களிலும் தெய்வங்கள் நமக்கு எல்லா செல்வங்களையும் கொடுக்கும் என்று நம்பிக்கை மக்களிடத்தில் இருக்கிறது.
இந்த நாட்களில் செல்வங்கள் அனைத்தும் நம்மிடம் தான் இருக்க வேண்டும். அது நம்மிடமிருந்து வெளியே சென்றால் நிரந்தரமாக செல்வம் நம்மை விட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிடும் என நம்பப்படுகின்றது.
இதனால் தான் மக்கள் இந்த இரண்டு நாட்களில் பிறருக்கு பணம் கொடுப்பதை தவிர்த்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாது இந்த இரண்டு நாட்களில் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற காரணங்களுக்காக வீட்டில் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாது என்ற ஐதிகமும் இருக்கிறது.
வீட்டில் செல்வங்கள் பெருக
மேலும் நம் வீட்டில் செல்வங்கள் பெருக வேண்டுமென்றால் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்ற வேண்டும். அதனை தொடர்ந்து பிரம்ம முகூர்த்ததில் எழுந்திருக்க வேண்டும்.
பணம் கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படியில் நின்று கொண்டு நின்று கொடுக்கக் கூடாது மற்றும் வாங்கக்கூடாது.
வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியே வாசல் படியை தாண்டி கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளலாம்.
குறிப்பாக இரவில் கூட்டிய குப்பைகளை வீட்டிலிருந்து வெளியே தள்ளக்கூடாது.
அதோடு வீட்டில் ஏற்றிய குத்து விளக்கு தானாக அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் விளக்கினை வாயால் ஊதி அணைக்காமல் பூக்களை கொண்டு அணைப்பது நல்லது.