மகன் கொள்ளையடித்த நகைகளை அடகுவைத்துப் பணம் பெற்ற தாய்!
மகன் கொள்ளையடித்து வந்த நகைகளை அடகுவைத்துப் பணம் பெற்ற தாய் மற்றும் மகன் உட்பட 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அக்கீமன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அக்கீமன பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய தாயும் அவரது 22 வயது மகன் மற்றும் அவரது மகனின் நண்பர்களான 23 மற்றும் 28 வயதுடைய இருவருமே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
மேலதிக விசாரணையில், சந்தேக நபரின் மகன் ஹெரோயின் தருவதாக கூறி மஹமோதர பிரதேசத்தில் உள்ள ஒருவரிடமிருந்து 700,000 ரூபாவை பெற்றுக்கொண்ட நிலையில் ஹெரோயின் தொகையை வழங்க முடியாமல் போனதாகவும் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாகவே சந்தேக நபர் இவ்வாறு தனது இரு நண்பர்களின் உதவியுடன் நகையை திருடியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.