ஆம்புலன்ஸில் இருந்து ஸ்ட்ரெச்சருடன் வீதியில் விழுந்த நோயாளி ; சாரதியின் அலட்சியம்
இந்தியாவின் அதிவேக நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஆம்புலன்ஸில் நடந்த ஒரு சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் சாரதியின் அலட்சியத்தின் உச்சத்தையும் காட்டியுள்ளது.
ஓடிக்கொண்டிருந்த ஆம்புலன்ஸின் பின் கதவு திடீரெனத் திறந்து, உள்ளே இருந்த நோயாளி ஸ்ட்ரெச்சருடன் கீழே விழுந்துள்ளார்.

இணையவாசிகள் கோபம்
நோயாளி ஸ்ட்ரெச்சருடன் கீழே விழுந்த பிறகும், ஆம்புலன்ஸ் டிரைவர் அதனைக் கவனிக்காமல் வேகமாகக் கிளம்பிச் சென்றுள்ளார்.
இதனால், நோயாளி ஸ்ட்ரெச்சருடன் நெடுஞ்சாலையின் நடுவில் தனித்து விடப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, பின்னால் எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
तमिलनाडु के कून्नूर में दिल दहला देने वाला वाकया,
— Arzoo Alam (@ArzooAl34714966) November 10, 2025
एम्बुलेंस का दरवाज़ा खुला और मरीज़ स्ट्रेचर समेत सड़क पर गिर गया
लेकिन ड्राइवर को ज़रा भी खबर नहीं हुई, वो आगे बढ़ता रहा
ज़िंदगी बचाने वाली गाड़ी ही लापरवाही की मिसाल बन गई pic.twitter.com/QfFaD3GVAM
இந்தச் சம்பவத்தை ஆம்புலன்ஸுக்குப் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவர்கள் தங்கள் கேமராவில் படம் பிடித்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், பொறுப்புள்ளவர்களே இப்படித் தூங்கினால் எப்படி? என்றும், “கதவு ஏன் திறந்தது? இது மிகப்பெரிய தவறு என்றும் இணையவாசிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.