மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அரசியலில் கடந்துவந்த பாதை!

covid19 politics Mangala Samaraweera former minister
By Sulokshi Aug 24, 2021 09:14 AM GMT
Sulokshi

Sulokshi

Report

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, தீவிர பிரிவில் சிகிற்சை பெற்றுவந்த நிலையில் இன்று தனது 65 ஆவது வயதில் காலமானார். தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த சில நாட்களாக சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.

அரசியல் கிங் மேக்கர் என புகழப்படும் மங்கள சமரவீர கடந்துவந்த பாதை

1989 காலப் பகுதி அரசியலில் மாத்திரமல்ல இந்த நாட்டையே உலுக்கி அதிரச் செய்த காலகட்டமாகும். அரசியல் சக்திகள், இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர் என பொதுப்படையாகவே முழு மக்கள் கூட்டத்தையும் நம்பிக்கை இழக்கச் செய்த, வருடமாகவே அதனை நோக்க வேண்டியுள்ளது.

1988-1989 காலம் நிம்மதியை தொலைத்து விட்ட காலப் பகுதியாகும். தெற்கில் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. 1989 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் வரம் பெற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முக்கியத்துவம் பெற்றனர். ஆளும் தரப்பு போன்றே எதிர்த் தரப்பிலும் பலர் தெற்கிலிருந்து அரசியல் பிரவேசம் செய்தனர். அவர்களில் ஒரு இளம் அரசியல்வாதி சகலராலும் கவர்ந்து ஈர்க்கப்பட்டவராகக் மங்கள சமரவீர காணப்பட்டார்.

அவர் குறித்து உள்ளூர் ஊடகங்கள் பரவலாகவே பேசின. வெளிநாட்டில் படித்து விட்டு வந்த இந்த இளம் அரசியல்வாதி தனது அரசியல் பாடப்புத்தகத்தை அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவிடமிருந்து பெறறுக் கொண்டார். மாத்தறை தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட வேளையில் மங்கள சமரவீரவை கட்சியின் தலைவியின் தவறான தெரிவென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருதினார்கள்.

அவரின் வித்தியாசமான உடை, நடை பாவனை காரணமாக சிரேஷ்ட தலைவர்கள் புதிய அமைப்பாளர் மாத்தறை போன்ற இடதுசாரி தொகுதிக்கு தெரிவு செய்யப்பட்டது குறித்து கட்சித் தலைவியை சந்தித்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். எனினும் சிரேஷ்ட உறுப்பினர்களால் மறக்கப்பட்ட ஒரு விடயம் காணப்பட்டது.

அது மாத்தறையிலிருந்த புரட்சிகரமான ஒருவரான மாகாநாம சமரவீர இந்தப் புதிய அமைப்பாளரின் தந்தையென்பதாகும். மகாநாம சமரவீரவுக்கு நான்கு பிள்ளைகள். மனைவி ​கேமா பத்மாஷனி. பின்னர் அவர் கேமா சமரவீர என அழைக்கப்பட்டார். இவர்களில் ஜயம்பதி கட்டட நிர்மாணக் கலைஞர். ஜயந்தி மற்றும் சாந்தினிக்கு அடுத்ததாக மங்கள பின்சர பிறந்தார். கமியூனிசவாதியான மகாநாம சமரவீர 1952ம் ஆண்டு மாத்தறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 2வது பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

சட்டத்தரணியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையில் அரசியலுக்கு வந்த மகாநாம சமரவீர, 1956ம் ஆண்டு மஹஜன எக்சத் பெரமுன கட்சியில் போட்டியிட்டு மாத்தறை தொகுதியில் வெற்றி பெற்றார். மங்கள பின்சர சமரவீர தனது 10வது வயதில் தந்தையை இழந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மங்கள சமரவீரவுக்கு தந்தையின் இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் இங்கிலாந்தின் மிகவும் பழைமை வாய்ந்த கல்வி நிறுவனமான ‘சென். மார்டின் ஸ்கூல் ஓப் ஆர்ட்’ பாடசாலையில் கல்வி கற்று கலைப்பட்டதாரியான மங்கள சமரவீர ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தார்.

சுயாதீன மற்றும் எளிமையான வாழ்க்கை முறை மங்கள சமரவீரவின் இளைஞர் காலத்தில் காணப்பட்ட விடயமாகும். கொழுந்து விட்டெரியும் நாட்டில் கண்ணீர் மற்றும் காணாமல் போகும் சமூகத்தின் வேதனைக்கு விடை தேட மங்களவுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது.

அறிமுகமில்லாத துப்பாக்கிதாரிகள் மனிதக் கொலை, கடத்தல், உத்தியோகபூர்வ இராணுவத்தினர், உத்தியோகபூர்வமற்ற இராணுவத்தினர், மஞ்சள்பூனை, ஆயுதம் தாங்கிய அமைப்புகள் தொடர்பான செய்திகள் நிறைந்த ஊடகங்களுக்கு புதிய செய்தியாக மங்கள சமரவீர மற்றும் தெற்கின் இன்னொரு இளம் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவான ‘மவ் பெரமுன’ (தாய் முன்னணி)என்பன அக்காலத்தில் காணப்பட்டன.

அதுவரை கணவனை இழந்த பெண்களுக்கு ஆதரவாகக் காணப்பட்டது தேவாலயங்களும், விகாரைகளும், கோயில்களும் மட்டுமே. அப்போது அப்பாவி தாய்மார்களின் கண்ணீர் வேதனையை சந்தைப்படுத்தி அரச அதிகாரத்தைப் பெற முயற்சி செய்வதாக மங்கள மீது குற்றம்சாட்டப்பட்டது. கணவரையும், பிள்ளைகளையும் இழந்த ஆயிரக்கணக்கான தாய்மார் மங்களவின் ‘மவ் பெரமுன’ மீது நம்பிக்கை வைத்தார்கள்.

கணவர்மார், பிள்ளைகளுக்கு என்ன நடந்தது எனத் தேடும் வேளையில் அந்தத் தாய்மார்களுக்கு தொழில் பெற்றுக் கொடுக்க மங்கள முயற்சி செய்தார். அதோடு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ சட்டத்தரணி என்பதால் மவ் பெரமுனவுக்கு வந்த தாய்மாருக்கு சட்ட உதவியும் கிடைத்தது. 1956 ஏப்ரல் 21ம் திகதி பிறந்த மங்கள பின்சர சமரவீர எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகும் போது அவருக்கு வயது 32 ஆகும்.

மஹிந்தவுடன் மவ் பெரமுன கட்சிக்கு தலைமை வழங்கும் வேளையில் அவர் எஸ். பி. திசாநாயக்க போன்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் நட்புறவுடன் செயற்பட்டார். அவரின் அடுத்த நடவடிக்கை அரசாங்கத்தைக் கைப்பற்றுவதாகும். அவர் மிகவும் ஆக்கபூர்வமிக்க வழிகளில் நம்பிக்கை வைத்தார்.

அப்போது எதிர்க்கட்சிக்குப் பலமாக விளங்கிய மாற்றுப் பத்திரிகைகளுடன் மங்களவுக்கு சகோதரபூர்வமான தொடர்பிருந்தது. ஊடகங்கள் மீதான அக்கறை காரணமாக மங்கள சமரவீர பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் ஊடக அமைச்சராக பின்னர் நியமிக்கப்பட்டார்.

1994ம் ஆண்டு கட்சி உறுப்பினராகவும் அமைச்சராகவும் மங்கள சமரவீர முக்கியமான ஒரு நபராகத் திகழ்ந்தார். மங்களவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இளம் ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், சித்திரக் கலைஞர்கள் ஆகியோருடன் கூடிய ஊடகப் பிரிவொன்றும் இருந்தது.

‘மாத்தொட்ட’ என்னும் சஞ்சிகை மேற்படி இல்லத்திதிலுள்ள கட்டடமொன்றிலிருந்தே வெளிவந்தது. கொழும்பு நகரில் சட்ட விரோத ஒழுங்கற்ற மற்றும் அரசியல் பலவான்களால் அமைக்கப்பட்ட கட்டடங்களால் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் சூழல் பிரச்சினை பற்றி மங்களவின் கவனம் ஈர்க்கப்பட்டது அவர் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த வேளையிலாகும்.

பேர வாவியின் அபிவிருத்தி மங்களவின் திட்டமாகும். அனுமதியற்ற வீடுகள், கடைகளை அகற்ற மங்கள எடுத்த நடவடிக்கை அன்று வேறு யாராலும் செய்ய முடியாத சிரமமான காரியமாகும். சமூகத்தை இப்போதுள்ள சகதியிலேயே வைத்துக் கொண்டு வாக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பிய அரசியல்வாதிகளின் எண்ணங்களுக்கு எதிரானவர் மங்கள சமரவீர. நகர அபிவிருத்தி தொடர்பான மங்களவின் திட்டத்தை செயற்படுத்த முடியாது போனதற்கு எமது அரசியல்வாதிகளுக்கே உரிய குணங்களே காணமாகும்.

1994ம் ஆண்டு மக்கள் ஐக்கிய முன்னணி அதிகாரத்துக்கு வந்த வேளையில் நாட்டின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக பாரியளவில் பேசப்பட்டு வந்தது. நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்படுத்தவும் இனவாதம் தலைதூக்குவதால் ஏற்படும் சமூகப் பாதிப்பை கட்டுப்படுத்தவும் ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் அவசியம் என்பது மங்களவின் கருத்தாகும். ‘வெள்ளைத் தாமரைத் திட்டம்’, ‘புத்தகமும் செங்கல்லும்’ என்பன அதன் பலனேயாகும்.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட எந்தவொரு விடயத்தையும் பொறுப்புடன் சிறந்த முறையில் நிறைவேற்றக் கூடிய திறமை மங்களவிடம் காணப்பட்டது. இவ்வாறான அரசியல்வாதிகள் மிகக்குறைவு. துறைமுக மற்றும், விமான சேவைகள் அமைச்சராகவும் ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சராகவும், நகர அபிவிருத்தி அமைச்சராகவும் அவர் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் கீழ் டெலிகொம் நிறுவனத்தை மீளக்கட்டியெழுப்பி ஜப்பானுடன் பங்குதாரராக மாறியது மங்களவின் காலத்திலாகும். அன்று டெலிகொம் நிறுவனத்தின் 35 வீத பங்குகளை என். டி. டி. நிறுவனத்துக்கு பெற்றுக் கொடுக்க எடுதத முடிவு தொழிற்கங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் விரோதத்துக்கு உள்ளானது.

ஆனால் நவீனமயமாதலின் நன்மையை பெறுவதற்கு அதன் பின்னரே டெலிகொம் நிறுவனத்தால் முடிந்தது. அதிநவீன உபகரணமாக மாறியிருந்த தொலைபேசி வசதி தூரக் கிராமங்களுக்கும் அதன் பின்னரே கிடைத்தது. மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று முகாமையாளராக மங்கள சமரவீரவுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றியமையால் பின்னர் அவருக்கு வெளிநாட்டலுவல்கள் மற்றும் துறைமுக அமைச்சும் வழங்கப்பட்டது. மங்கள மனசாட்சிப்படி அரசியலில் ஈடுபடுபவர் என்ற பெயரெடுத்தவர்.

சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்வது அவரின் குணமாகும். அரசாங்கம் செல்லும் பாதை தவறென்று கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அன்று மங்கள அனுப்பிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மங்களவை அரசிலிருந்து வெளியேற்ற பலரும் விரும்பினர். இறுதியில் மனசாட்சிக்கு இடம்கொடுத்து அமைச்சர் பதவியைத் துறந்து அவரே அரசாங்கத்திலிருந்து வெளியேறினார்.

பாராளுமன்றத்தில் இருந்து கொண்டே குடும்ப அரசியல், ஊடக கட்டுப்பாடு மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் எதிர்க்கட்சி சக்தியாக மங்களவின் குரல் ஒலித்தது. மங்கள தரப்பினர் என நாடு பூராவும் சென்று ராஜபகஷ எதிர்ப்பு என்னும் தீயை மூட்ட மங்கள சமரவீர தனது அரசியல் நண்பரான ஸ்ரீபதி சூரியாராச்சியுடன் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

உண்மையை சொல்லப்போனால் அதுவரை தூக்கத்திலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மங்களவின் நடவடிக்கைகள் உத்வேகமாக அமைந்தன. குறுகிய காலத்தில் மாவட்ட அமைப்புகளை உருவாக்க மங்கள தரப்பால் முடிந்தது. ஊடகங்கள் 2010 ஓகஸ்ட் 5ம் திகதி மங்கள தரப்பை கலைக்க முடியாது என செய்தி வெளியிட்டன.

அதேவேளை ஐ.தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தும் அவருக்கு அழைப்புக் கிடைத்தது. 2010 ஓகஸ்ட் 6ம் திகதி சிறிகொத்தவில் மங்கள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பரிமையைப் பெற்றுக் கொண்டார். அதன் பின் சில நாட்களில் மங்கள சமரவீரவுக்கு ஐ. தே. க. விசேட பொறுப்பை வழங்கியது. தொடர்பாடல் துறையில் தலைவர் பதவியாகும். மங்கள சமரவீரவை விவாதத்துக்குரிய பாத்திரமாக சித்தரித்து ஒரு முறை பேராசிரியர் ஒருவர் மங்களவுக்கு பகிரங்கமாக நிந்தனைக் கவிதை பாடினார்.

அவமானம் தன்னை நோக்கி வரும்போது அவர் பதற்றப்படவில்லை. துயரப்பட்டு பின்னோக்கிச் செல்லவில்லை. 2010ம் ஆண்டு பொது அபேட்சகராக சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்த மங்கள இணை ஊடகப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

அத்தேர்தலில் கசப்பான அனுபவங்கள் மங்களவின் அரசியல் வாழ்க்கையை வேறொரு வழியில் பலப்படுத்தும் சம்வமாக அமைந்தது.

அரசை உருவாக்குபவர்:-

ரணில் எதிர்ப்பு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நீண்ட காலமாக உள்ள ஒன்றாகும். மங்கள மாத்தறை ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராகி சில நாட்களிலேயே தெற்கில் நடத்தப்பட்ட ஊர்வலம் காரணமாக மாத்தறையில் பதற்றம் நிலவியது. அது ரணிலுக்கு எதிரான ஊர்வலமாகும். மாத்தறையில் மங்களவின் ஆதரவாளர்களுக்கும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கிய குழுவினருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக ஊர்வலம் நிறுத்தப்பட்டது.

மங்களவின் கறுவாத்தடிப் படை என்னும் பெயர் விரைவாக நாடு பூராவும் பரவியது. மங்கள எப்போதும் தான் ஆஜராகியுள்ள அரசியல் கட்சிக்கு நியாயமாக நடக்க முயற்சி செய்வது தெளிவான விடயமாகும். களுவாத்தடி தாக்குதலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அணியின் அநேகமானோர் மங்கள மீது குற்றம்சாட்டியதாகக் கூறப்பட்டது.

ஆனால் அவர் உண்மைக்காவே ஆஜராகியிருந்தார் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார். ஐ.தே.க.வினுள் மங்களவுக்கு ரணிலிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்தாலும் அவரை ஒருபுறம் ஒதுக்கி வைக்க வேண்டிய தேவை ஒரு சிலருக்கு இருந்தமை மங்களவுக்கு விளங்கியது. அவர் அதனை காலத்துக்கு விட்டுவிட்டார்.

காலம் அதற்குப் பின்னர் வழிகாட்டியது. மங்களவுக்கு அரவை உருவாக்குபவர் (கிங்மேக்கர்) என்ற பெயர் இந்த மூன்று யுகமாக அவரின் அரசியல் நடவடிக்கை காரணமாகவே கிடைத்தது. பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து எடுத்து 2015 ஜனாதிபதியாக்கும் வரை நடைபெற்ற அனைத்து விடயங்களிலும் மக்களின் பங்களிப்பு உள்ளதென சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. மங்கள நிதியமைச்சின் இயக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதுடன் இரண்டு தடவைகள் வெளிநாட்டமைச்சராக பணிபுரிந்தவராவார்.

கடந்த 30 வருட அரசியல் காலத்தில் எந்தவொரு வேளையிலும் பிற்போக்கான கருத்துக்களை அவர் வெளியிடவில்லை. அதேபோல் அதற்கு எதிரான அரசியல்வாதிகளுக்கும் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் அவர் தயங்கியதில்லை. மூன்று தசாப்தங்களாக இலங்கை அரசியலில் மங்களவின் பின்னணி பற்றிப் பேசுவது காலத்தோடு அவர் முதிர்ச்சி அடையாதவர் என்ற காரணத்தினாலாகும்.

இரண்டு தசாப்தங்கள் சென்று சிரேஷ்டவராக மாறுவது என்பது எந்தவொரு தொழிலுக்கும் உரிய விடயமாகும். இனவாதம், மற்றும் தேசிய வாதம் தொடர்பான தெளிவு மங்களவிடம் காணப்பட்டது. தேசியவாதம் மற்றும் இனவாதம் என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டு எல்லை எங்கே உள்ளதென்பது அநேகமான அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளாத ஒன்றாகும்.

மங்கள தொடர்பாக கதைக்கும் போது மங்கள கடுமையல்லாத அரசியல் பின்னணிக்குரியவர் என்ற குற்றச்சாட்டை நிராகரிக்க இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டும். எதிர்ப்புகளுடன் கூடிய அரசியல் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதிகளுக்கு குறைவில்லாத நாட்டில் மங்களவை எவ்வாறு வகைப்படுத்துவது என்பது நிச்சயமாகக் கூற முடியாத பிரச்சினையாகும். 1994ம் ஆண்டு அரசின் முதலாவது ஊடகத்துறை அமைச்சரான தர்மசிறி சேனநாயக்கவின் அப்பொறுப்பு மங்களவுக்கு வழங்கப்பட்டது.

ஊடகத்துறைக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள மோதல் நிரந்தரமானது. அது ஜனநாயகத்துக்கு தேவையான ஒன்றென்பது மங்களவின் கூற்றாகும். இன்று கறுப்பு ஊடகமென எதிரப்புக்குள்ளாகியுள்ள ஊடக நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும் தேசிய தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை உருவாக்கவும் மங்களவிடம் தெளிவான அபிலாஷை இருந்ததாக தெரிகின்றது. மங்கள அரசியல் துருப்புகளுக்கு குறைவில்லாத கதாபாத்திரமாகும். தோல்வியினால் துவண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லாதிருந்த அரசதிகாரம் 1994ம் ஆண்டு கிடைத்தமை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை புதிய அபேட்சகராக நியமிக்க மங்கள எடுத்த முயற்சியினாலாகும்.

சந்திரிகா பண்டாரநாயக்கவின் நம்பிக்கைக்குரியவராக மாறிய மங்கள 2001ல் எதிர்க்கட்சியின் அமைப்பாளராவதோடு மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் அரசதிகாரம் பெறறுக்கொள்ள அரசியல் துரும்பைப் பாவித்தவர். கணக்கெடுப்புகளின்படி அடுத்த தேர்தல்களில் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியது மங்களவாகும்.

2005இல் சந்திரிகாவுக்குப் பதிலாக மஹிந்தவை தெரிவு செய்த மங்கள மஹிந்தவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பிரசார முகாமையாளராக மாறியதும் அடுத்த பிரதமர் மங்கள என்னும் கருத்தை ஏற்படுத்தியதும் அங்களவுக்கே உரித்தான உபாயங்களின் பலனாகும். இரண்டு தடவைகள் உள்நாட்டமைச்சராகவும் மூன்று முறை ஊடக அமைச்சராகவும் ஒரு தடவை பிரதி நிதி அமைச்சராகவும் பின்னர் நிதியமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். நிதி அமைச்சராக பணியாற்றும் வேளையில் மிகவும் சிரமமான பொருளாதார மற்றும் ,அரசியல் பின்னணியில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கத் தயாராகவுள்ளார்.

2015ம் ஆண்டளவில் சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாட்டுக்கு வரவேற்பு மற்றும் கௌரவத்தைப் பெற்றுக் கொடுக்க வெளிநாட்டமைச்சரான மங்களவால் முடிந்துள்ளது என்பதை எதிர்த்தரப்பாரும் எற்றுக் கொள்கின்றனர். ஊடகவியலாளர்களுக்காக வீட்டுத் தொகுதியொன்றை அமைத்துக் கொடுத்த பெருமை மங்களவுக்கு உரியது.

அரசாங்கத்தின் தோளில் கரங்களைப் போட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கும் அவ்வாறு இல்லாத ஊடகவியலாளர்களுக்கும் மங்களவின் ஊடகவியலாளருக்கான வீட்டுத் திட்டத்தில் வீடுகள் கிடைக்கப் பெற்றன. அத்துடன் கொலை செய்யப்பட்ட ரிச்சர்ட் சொய்சா ஊடகவியலாளரின் பெயரால் அமைக்கப்பட்ட வீட்டுத் தொகுதிகள் ஊடாக தனது அரசியல் பிம்பத்தை உருவாகக்க மங்கள முயற்சித்துள்ளார்.

மங்கள சமரவீர தனது அரசியல் பின்னணியில் இனவாதியாக அல்லாது பிற்போக்குவாதியாகவோ இல்லாது வலுவான அரசியல் பின்னணியை உருவாக்கியுள்ளமை அனைவராலும் பேசப்படக் கூடிய ஒன்றாகும்.

மூன்று தசாப்தங்களாக இலங்கை அரசியலில் மங்களவின் பின்னணி பற்றிப் பேசுவது காலத்தோடு அவர் முதிர்ச்சி அடையாதவர் என்ற காரணத்தினாலாகும். இந்நிலையில் இன்று கொரோனா எனும் கொடிய காலனுக்கு நல்லதொரு அரசியல்வாதியை இழந்து இலங்கை மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, அல்லாரை

22 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US