மதபோதகர் ஜெரொமின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கும் சஜித்!
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சமீபத்தில் வெளியிட்ட பொறுப்பற்றதும் அவமரியாதையானதுமான கருத்துக்களுக்கு வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, Sajith Premadasa குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சஜித் வெளியிட்ட அறிக்கையில்,
தூய பௌத்தத்தை உறுதியாக நம்பும் பௌத்தத்தை நிலைநிறுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் பௌத்தராக அந்த போதகரின் கருத்து தொடர்பில் நான் மிகவும் வருந்துகிறேன்.
இலங்கையில் முன்னர் காணப்பட்டதை விட நல்லிணக்கம், சகோதரத்துவம், மனித நேயம் ஆகியவை வலுவாக கட்டியெழுப்பப்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எனவே இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களால் மத ரீதியிலான மோதல்கள் இன வெறுப்பு, கோபம் போன்ற தீய எண்ணங்கள் அனைவர மத்தியிலும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
இலங்கை நீண்ட காலமாக தூய பௌத்தத்தால் போஷிக்கப்பட்டுள்ள நாடாகும். பௌத்தம் ஒரு உலகளாவிய கோட்பாடாகும்.
இது எந்த மதத்துக்கோ அல்லது தேசத்துக்கோ உரித்துடையதல்லாத ஒரு உலகளாவிய பொது போதனையாகும்.
வெறுப்புக்குப் பதிலாக பரிவையையும் அவமரியாதைக்குப் பதிலாக மரியாதையையும் அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்டவும் உலகிற்கு கற்பித்த ஒரு கோட்பாடாகும்” எனத் தெரிவித்துள்ளார்.