நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை!
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழக அரசாங்கத்துடன் இணைந்து கப்பல் போக்குவரத்தினைத் தொடங்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் தொழிற்துறை பாதுகாப்பு அதிகாரிகள் (CISF) மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகள் எதிர்வரும் 2 ம் திகதிக்குள் நிறைவு பெற்று, வருகின்ற ஒக்டோபர் மாதம் ஒன்றிய அரசு அனுமதியுடன் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.