இயக்குநர் இமயம் சரிந்தது....தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு! 50 ஆண்டு திரைப்பயணத்தில் குவித்த விருதுகள்
தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் மூத்த இயக்குநரான ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா (84) அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சின்னசாமி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 'என் இனிய தமிழ் மக்களே' என்ற அவரது காந்தக் குரலும், அவர் அறிமுகப்படுத்திய எண்ணற்ற கலைஞர்களும் தமிழ் சினிமாவின் பொற்காலமாக என்றும் இருக்கும்.
தமிழ் சினிமாவை கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, தனது 50 ஆண்டுகால கலைப்பயணத்தில் எண்ணற்ற சாதனைகளையும் விருதுகளையும் குவித்துள்ளார்.

1977-ல் '16 வயதினிலே' படத்தின் மூலம் அறிமுகமான அவர், இன்று மறைந்தாலும், அவர் படைத்த காவியங்கள் என்றும் நிலைத்திருக்கும்.
பாரதிராஜா பெற்ற முக்கிய விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள் (6 முறை)
சீதாகோக சிலகா (1981) - சிறந்த தெலுங்குத் திரைப்படம்.
முதல் மரியாதை (1985) - சிறந்த தமிழ்த் திரைப்படம்.
வேதம் புதிது (1987) - சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட சிறந்த திரைப்படம்.
கருத்தம்மா (1994) - குடும்ப நலனை வலியுறுத்தும் சிறந்த திரைப்படம்.
அந்திமந்தாரை (1995) - சிறந்த தமிழ்த் திரைப்படம்.
கடல் பூக்கள் (2000) - சிறந்த திரைக்கதை.
பிலிம்பேர் விருதுகள் (4 முறை)
சிகப்பு ரோஜாக்கள் (1978) - சிறந்த இயக்குநர்.
வேதம் புதிது (1987) - சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படம்.
வாழ்நாள் சாதனையாளர் விருது (2013) -
திரைத்துறைக்கு அவர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக. தமிழக அரசு மாநில திரைப்பட விருதுகள் (6 முறை)
16 வயதினிலே (1977) - சிறந்த இயக்குநர்.
அலைகள் ஓய்வதில்லை (1981) - சிறந்த இயக்குநர்.
முதல் மரியாதை (1985) - சிறந்த திரைப்படம்.
கிழக்குச் சீமையிலே (1993) - சிறந்த திரைப்படம்.
கருத்தம்மா (1994) - சிறந்த திரைப்படம்.
அந்தீமந்தாரை (1995) - சிறப்பு விருது.

அரசின் உயரிய கௌரவங்கள் பத்மஸ்ரீ (2004)
இந்தியத் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காக இந்திய அரசு இவருக்கு நாட்டின் நான்காவது உயரிய குடிமகன் விருதான 'பத்மஸ்ரீ' வழங்கி கௌரவித்தது.
கௌரவ டாக்டர் பட்டம் (2005): சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதர விருதுகள் நந்தி விருது (1981) 'சீதாகோக சிலகா' படத்திற்காக ஆந்திர அரசின் சிறந்த இயக்குநருக்கான நந்தி விருதைப் பெற்றார்.
விஜய் விருதுகள் (2013) 'பாண்டிய நாடு' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.
பாரதிராஜா வெறும் இயக்குநர் மட்டுமல்ல, அவர் ஒரு சகாப்தம். கிராமத்து எதார்த்தங்களை திரையில் வடிப்பதில் அவருக்கு நிகர் அவரே.
50 ஆண்டுகால பயணத்தில் அவர் பெற்ற இந்த விருதுகள், அவரது உழைப்பிற்கும் திறமைக்கும் சான்றாக விளங்குகின்றன