கிலோ 200 ரூபாய் ; கிளிநொச்சியில் கட்டுக்கட்டாக குவிந்த பார்த்தீனியம்!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் கட்டுக்கட்டாக வந்து குவிந்த பாத்தீனியத்தால் அதிகாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாயுள்ளனர்.
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் குறிப்பாக நகரத்திலும் நகரத்தை சூழ்ந்துள்ள பகுதிகளிலும் படர்ந்து உள்ள மண்வளத்தை உறிஞ்சி அழிக்கும் பாத்தீனியத்தை அழித்து ஒழிப்பதற்கான தீர்மானம் கரைச்சி பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இந்திய இராணுவத்தோடு வந்த பார்த்தீனியம்
அதன்படி சூழலில் காணப்படுகின்ற பார்த்தீனிய செடிகளை வேருடன் பிடுங்கி பிரதேச சபை அலுவலகத்தில் கையளிக்கின்ற ஒவ்வொரு கிலோ பாத்தீனியத்துக்கும் இருநூறு ரூபா வழங்கப்படும் இந்நடவடிக்கையானது இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படுகிறது .
பிடுங்குகின்ற போது கைகளில் கையுறை அல்லது ஷெப்பிங் பை போன்ற பாதுகாப்பு கையுறைகளை அணிந்து அதனை அகற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வேருடன் கொண்டு வரப்படுகின்ற செடிகளுக்கு மாத்திரமே பணம் வழங்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.
இந்திய இராணுவம் 1987 ஆம் ஆண்டு ஈழத்திற்கு வந்தபோது இந்திய இராணுவத்திற்கு எடுத்துவரப்பட்ட உணவு பொருட்களோடு சேர்ந்து பார்த்தீனியம் ஈழத்தில் வந்து இறங்கி ஈழதேசம் எங்கும் பரவியுள்ளமி குறிப்பிடத்தக்கது.
