நாடாளுமன்ற பணம் கையாடல்; கைதாவாரா அருச்சுனா எம்பி?
நாடாளுமன்ற பணத்தை கையாடல் செய்த விவகாரம் தொடர்பாக, யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில். இது தொடர்பாக தான் எந்த ஒரு விளக்கத்தையும் தரப்போவது இல்லை. எதனையும் தான் நிரூபித்து ஞாயப்படுத்த வேண்டிய இல்லை என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அருச்சுனாவை கைது செய்ய வேண்டும்
இன் நிலையில் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தவேண்டும் என்று, நாடாளுமன்ற திறைசேரி நிர்வாகி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ள நிலையில், அவரை பொலிசார் மீண்டும் கைது செய்து விசாரணை நடத்தக் கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது.
ஏற்கனவே அர்ச்சுணா MP பயணித்த கார் வேகமாகச் சென்றது என்று பொலிசார் மறிக்க, அவர்களோடு தர்கத்தில் ஈடுபட்டு, அது தொடர்பாகவும் பொலிஸ் விசாரணையில் சிக்கியுள்ளார் எம்பி அர்ச்சுனா.
தற்போது இந்த விசாரணை வேறு இடம்பெற உள்ள நிலையில், நாடாளுமன்றம் சென்றது முதல் அடிக்கடி இவ்வாறான சிக்கலில் சிக்கிக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , எப்படி தமிழர்களின் பிரச்சனை பற்றிப் பேசப் போகிறார் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.