மட்டக்களப்பில் வறண்டுபோன பூமி; மக்கள் கவலை
கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக குளங்கள், ஏரிகள், குட்டைகள் என்பன முற்றாக வற்றி வருகின்றன.
இதனால் மீனவர்களும் விவசாயிகளும் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர் . மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதிகமான வறட்சியான காலநிலை காணப்படுவதால் விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் என்றுமில்லாதவாறு வறட்சி
விவசாயிகள் தமது வயல் நிலங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதினால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர். மட்டக்களப்பில் என்றுமில்லாதவாறு இம்முறை அதிகமான வறட்சியான காலநிலை காணப்படுகிறது.
இதனால் கடும் உஷ்ணமான காலநிலை நிலவுவதால் குழந்தைகளும், முதியோர்களும் வெளியே வர முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல்வேறு நோய்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குளங்கள் வற்றுவதனால் பெறுவதால் ஏரிகள் வடிகான்கள் வற்றி வருவதால் மீனவர்களும் விவசாயிகளும் பல்வேறு அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர் இதனால் ஏற்படும் இன்னல்கள் குறித்து விவசாயிகளும் மீனவர்களும் கருத்து தெரிவித்தனர்.