பஞ்சரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த மாத்தளை முத்துமாரி அம்மன்!(Photos)
மாசி மகம் நன்னாளை ஒட்டி வரலாற்று சிறப்புவாய்ந்த மாத்தளை முத்துமாரி அம்மன் பஞ்ச ரதத்தில் பவனி வந்த காட்சி பார்க்கும் பக்தர்களின் மனதை உருகவைத்துள்ளது.
முதல் ரதத்தில் மூத்தோன் முதல் வணக்கம் ஏற்று வினை அகற்றும் விநாயகனாக ஐயம் தீர்க்கும் ஐங்கரங்களுடன் பக்தர் குழாம் புடைசூழ வலம் வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பதியுடன் கரம் கோர்த்த சதியாய் சிவனம்பாள் ஏக ரதமேறி மாசிமகத்தாரகை நற்தினத்தில் அடியவர்களுக்கு சிவ பார்வதி தேவியாய் எழுந்தருளி அனுக்கிரகித்தாள் மாத்தளை முத்துமாரி அம்மன் .
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை என வள்ளி தேவயானி மணாளனாய் மாத்தளைத் திருநகர்தனில் திருத்தேர் எழுந்தருளி முருகனும் வலம்வர, ரத்தினத்தீவாம் லங்காபுரி அகமதில் பண்ணாகப் பதி போற்றிட அகிலாண்ட நாயகியாய் அகிலம் ரட்ஷித்து அரணாய் ஸ்ரீ முத்துமாரியம்மன் பக்தர்கள் புடைசூழ வீதிகளில் எழுந்தருளிளாள் .
சதுர் ரதங்கள் முன்னே சென்றிட பின்னே அம்பிகைத் தொண்டர்கள் புடைசூழ சண்டேஷ்வரியாய் தரணி காத்திட நிறைவழிபாட்டு திருமூர்த்தியாய்வலம் வந்து தன்னை நாடும் பக்தர்கள் மனங்களில் களிபெய்த வைத்தாள் அம்பாள்.






