DLS முறையில் இடம்பெற்ற போட்டியில் அபார வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி
தற்போது நடைப்பெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வோர்த் லூயிஸ் முறை (DLS) முறையில் 21 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ஓட்டங்களை பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரன் 108 ஓட்டங்களையும் காது வில்லி அஞ்சோனு, 96 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் முகமது வாசிம் ஜார் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி, 402 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டு இழப்பிற்கு துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருக்கும் வேளையில் மழை குறிக்கிட்டது.
குறுக்கிட்ட மழை
தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
எனினும், DLS விதிகளின் படி பாகிஸ்தான் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஃபக்ரி ஜமான்126 ஓட்டங்களையும், பாபர் அசாம் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் டிம் சோவிடம் இருந்து1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.