இலங்கையர் தீயில் ஏரிந்துகொண்டிருக்கும்போது செல்பி எடுத்த நபருக்கு நேர்ந்த கதி!
பாகிஸ்தானில் இலங்கையர் பிரியந்த குமாரை அடித்து சித்திரவதை உட்படுத்தப்பட்டு தீ வைத்து எரிந்து படுகொலை செய்யப்பட்டபோது புகைப்படம் எடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பாகிஸ்தான் சியல்கோட்டில் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் இலங்கையர் பிரியந்த குமாரை சித்திரவதை உட்படுத்தி, அவர் எரிந்துகொண்டிருந்த நிலையில் தனது தொலைபேசியில் செல்பி எடுத்த நபரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
இந்நிலையில், ஒருவரை படுகொலை செய்து அவரை தீயிட்டு கொழுத்தி அதனுடன் செல்பி எடுக்கும் மனநிலை குறித்து, அந்த புகைப்படம் தொடர்பில் பலர் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்து, இலங்கையர் பிரியந்த குமாரை எரியூட்டி கொன்ற போது அங்கிருந்து புகைப்படம் எடுத்த நபரை பொலிசாரால் கைது செய்துள்ள நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.