பெண்ணுடன் சிக்கிய தமிழ் பிரதேச செயலாளரின் பகீர் வீடியோ! யார் தெரியுமா?
மட்டக்களப்பில் பெண் ஒருவரை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றிச் சென்று பாசிக்குடா விடுதியில் பாலியல் இலஞ்சம் பெற்ற பிரதேச செயலாளர் ஒருவரின் வீடியோ ஆதாரங்கள் உட்பட வாட்ஸ்அப் பாலியல் உரையாடல்கள் பல ஆதாரபூர்வமாக சிக்கியுள்ளது.
அனுமதி பத்திரம் ஒன்றிற்கு சிபாரிசு கையொப்பம் பெறச் சென்ற ஒரு நபரிடம் குறித்த அனுமதி பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டுமாக இருந்தால் தனக்கு பெண் ஒருவரை பாலியல் இலஞ்சமாக தர வேண்டும் என கோரியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் குறித்த பிரதேச செயலாளரை சிக்க வைப்பதற்காக கொழும்பில் பணி புரியும் பெண் ஒருவரை தயார் செய்து பிரதேச செயலாளருடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
இதன் படி குறித்த பிரதேச செயலாளர் ஒரு சனிக்கிழமை குறித்த பெண்ணை கிழக்கு பல்கலைக்கழக பஸ் தரிப்பு நிலையத்திற்கு வருகை தருமாறு பிரதேச செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதேச செயலாளர் கூறியது போல் பஸ் தரிப்பு நிலையத்திற்கு வருகை தந்த அந்த பெண்ணை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பாசிக்குடாவில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பிரதேச செயலாளரின் இந்த செயற்பாடுகள் அனைத்தையும் குறித்த நபர் வீடியோ பதிவு செய்துள்ளதோடு பிரதேச செயலாளருடன் சென்ற பெண்ணும் பிரதேச செயலாளர் பாலியல் இலஞ்சம் பெற்ற காட்சிகளை வீடியோ பதிவு செய்துள்ளார்.
அத்துடன் பெண்ணை பிரதேச செயலாளர் ஏற்றிச் செல்லும் பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அது மட்டுமல்லாது இன்னும் பல அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்கள் விரைவில் வெளியாக உள்ளது, அவை தற்போது எமது செய்திப் பிரிவின் ஆசிரியர் பீடம் கலந்தாலோசித்து வருகிறது.
அது மட்டுமல்லாது இந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்கு அரச முகவர்களின் உதவியை கோரி உள்ளதாகவும், தற்போது மாவட்டத்தில் அதிகாரம் மிக்க அரசியல் பிரபலத்தின் உதவியை நாடி உள்ளதாக எமது செய்திப் பிரிவிற்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
அது மட்டுமல்லாது இந்த சம்பவம் பிள்ளையான் குழு முக்கியஸ்தர்களிடமே கையும் களவுமாக சிக்கியுள்ளன, அவர்களே ஊடகங்களிற்கு முதலில் இதனை தெரியப்படுத்தினர், தற்போது அவர்களின் கட்சிக்குள் இந்த சம்பவத்தில் முரன்பட்ட நிலை காணப்படுவதாகவும் குறித்த பிரதேச செயலாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டுவதாகவும் பிள்ளையானின் ஆதரவாளர்கள் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.
சமூகத்தில் எத்தனை தவறுகள் செய்தாலும் அதிகாரம் மற்றும் பணம் இருந்தால் எல்லோரும் பாப்பாற்றப்பட்ட விடுவர் என மேலும் ஆதங்கப்பட்டுள்ளனர்.
https://jvpnews.com/article/woman-in-a-vehicle-and-took-sexual-bribe-1622155525