மைதானத்தில் சக வீரரின் கன்னத்தில் அறைந்த பாக்.வீரர்: அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! (Video)
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பி.எஸ்.எல் 2022 ரி20 கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் இறுதியில் துவங்கிய இந்த தொடரில் மொத்தம் பங்கேற்ற 6 அணிகளும் 30 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் மோதி வந்தன.
இந்த தொடரில் நேற்று திங்கட்கிழமை (21-02-2022) பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் இருக்கும் கடாபி கிரிக்கெட் மைதானத்தில் கடைசி லீக் சுற்றுப் போட்டி நடைபெற்றது. அதில் பெஷாவர் மற்றும் லாகூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்த பெஷாவர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 158/7 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக அனுபவ வீரர் சோயப் மாலிக் 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். லாகூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக பாவத் அஹமத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 159 என்ற இலக்கை துரத்திய லாகூர் அணிக்கு அனுபவ வீரர் முகமது ஹபீஸ் 49 ஓட்டங்களும், நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் சாகித் அப்ரிடி கடைசி நேரத்தில் 20 பந்துகளில் 39* ஓட்டங்கள் விளாசியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியும் மிகச்சரியாக 158/8 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி சமன் ஆனது.
இதையடுத்து இந்த போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட பரபரப்பான சூப்பர் ஓவரில் பெஷாவர் 8 ஓட்டங்கள் எடுக்க அதன்பின் 9 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லாகூர் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால் பெஷாவர் சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ஒரு பாகிஸ்தான் வீரர் சக வீரரின் கன்னத்தில் அறைந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த போட்டியில் பெஷாவர் அணி துடுப்பெடுத்தாடியக் கொண்டிருந்தபோது 2வது ஓவரை லாகூர் அணி பந்து வீச்சாளர் ஹரிஷ் ரவூப் வீச அதில் ஒரு பந்தை பெஷாவர் அணியின் பேட்டர் ஹசரத்துல்லா சாசாய் சிக்ஸர் அடிக்க முயன்றார்.
Wreck-it-Rauf gets Haris! #HBLPSL7 l #LevelHai l #LQvPZ pic.twitter.com/wwczV5GliZ
— PakistanSuperLeague (@thePSLt20) February 21, 2022
ஆனால் அது கேட்ச்சாக மாறி லெக் சைட் பகுதியில் நின்று கொண்டிருந்த கம்ரான் குலாம் கைக்கு சென்றது. இருப்பினும் இரவு நேரப்போட்டி என்பதால் பனியின் தாக்கம் இருந்த காரணத்தால் அந்த கேட்ச்சை அவர் கோட்டை விட்டுவிட்டார்.
இதை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் ஹரிஷ் ரவூப் மீது கடும் கோபம் அடைந்தார்கள். இதேவேளை, அந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் கன்னத்தில் அறைந்தவரின் நெஞ்சில் தட்டிக்கொடுத்து பாராட்டிய கம்ரான் குலாம் பல ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார். இந்த காணொளி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.