அரச பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள சொந்தமில்லாத சொகுசு வீடு
கம்பஹா மல்வானியில் சொந்தமில்லாத சொகுசு வீடொன்று அரச பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டை பார்வையிட்டதன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் மல்வானியில் 16 ஏக்கர் காணியில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் நீச்சல் தடாகத்துடன் கூடிய சொகுசு வீடு பலரது விமர்சனத்துக்குள்ளானது.
மேலும், அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, குறித்த காணியை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் உறவினரான திரு நடேசன் கொள்வனவு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வழங்கிய பணத்தில் ஒப்பந்ததாரர் மூலம் வீடு கட்டப்பட்டதாக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த வீட்டின் நிர்மாணப் பணிகளுக்கு உதவிய கட்டட நிர்மாணிக்க முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
மேலும், பூர்வாங்க பணிகளுக்காக குறித்த வீட்டிற்கு சென்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்சவின் மனைவி எனினும் மல்வானி பிரதேசத்தில் தாம் சொகுசு வீடொன்றை கட்டவில்லை என பசில் ராஜபக்ச நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
இந்த நிலையில், விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி வீட்டின் உரிமையாளரை அடையாளம் காண முடியவில்லை.
எனவே, குறித்த சொகுசு வீட்டை நீதி அமைச்சின் கீழ் கொண்டு வருமாறும், எதிர்காலத்தில் நீதி அமைச்சின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துமாறும் கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.