குழந்தைகளின் வயது மீறிய வளர்ச்சி; காரணம் என்ன தெரியுமா!

World Health Day
By Yadu Aug 16, 2022 06:46 AM GMT
Yadu

Yadu

Report

 தற்போதைய  நவீன வாழ்க்கை முறை காரணமாக பல குழந்தைகள் இன்று உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் காணப்படுகின்றனர். உடல் பருமன் காரணத்தால் காலப்போக்கில் நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

குழந்தைகளின் வயது மீறிய வளர்ச்சி;  காரணம்  என்ன தெரியுமா! | Over Age Growth In Children

இவர்களின் மன மற்றும் உடல் நலனை பாதிக்கும் பல நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உடல்பருமனால் ஏற்படுகிறது.

எனவே குழந்தைகளுக்கு தகுந்த உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை கற்று கொடுப்பது உடல் பருமனை குறைக்க நல்ல வழி.

அத்தோடு சில குழந்தைகள் இப்போதெல்லாம் வயது மீறிய வளர்ச்சியுடன் காணப்படுகிறார்கள் என்பதால், அதிக எடை கொண்ட குழந்தைகளுக்கு அதிக கொழுப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ சோதனை மூலம் கண்டறிய வேண்டும் என்று கூறப்படுகிறது.

குழந்தைகளின் வயது மீறிய வளர்ச்சி;  காரணம்  என்ன தெரியுமா! | Over Age Growth In Children

குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாழ்க்கை முறை தேர்வுகள், உளவியல் சிக்கல்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை பின்னணி உள்ளிட்ட சில காரணங்கள் காணப்படுவதோடு உடல் பருமன் கொண்ட நபர்கள் அடங்கிய குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமனாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

குழந்தைகளின் வயது மீறிய வளர்ச்சி;  காரணம்  என்ன தெரியுமா! | Over Age Growth In Children

அத்தோடு உடற்பயிற்சியின்மை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்பட அதிகம் சாப்பிடுவது உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட மோசமான உணவுகள், துரித உணவுகள், குளிர்பானங்கள், மிட்டாய்களும் குழந்தைகளின் எடை அதிகரிப்பிற்கு காரணமாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

அதிக எடை கொண்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 2 மடங்கு அதிகமாக காணப்படுவதோடு அதிக எடை இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

கழுத்து பகுதியை சுற்றி சேரும் கொழுப்பு காரணமாக காற்றுப்பாதைகள் மிகவும் சிறியதாகி, சுவாசிப்பதை கடினமாக்குகிறது, குறிப்பாக இரவில். இது தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும், மரணத்திற்கு கூட வழிவகுக்கும். தூக்கத்தில் மூச்சுத்திணறலை உண்டாக்கும் OSA நிலை இளம் குழந்தைகளையும் பாதிக்கலாம்.

குழந்தைகளின் வயது மீறிய வளர்ச்சி;  காரணம்  என்ன தெரியுமா! | Over Age Growth In Children

உடல் பருமன் கொண்டவர்களின் இதயம் உறுப்புகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக உழைக்க வேண்டும். இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம் பக்கவாதத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் வயது மீறிய வளர்ச்சி;  காரணம்  என்ன தெரியுமா! | Over Age Growth In Children

 குழந்தைளின் உடற் பருமனை குறைக்க  பெற்றோர்கள் கனவத்தில் கொள்ளவேண்டியவை

உடல் பருமனான குழந்தைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி டயட்டில் வைக்க கூடாது, ஏனெனில் டயட் அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான ஆற்றல்களை வழங்காது.

 எடையை குறைக்க வேண்டும் என்பதை விட நல்ல ஆரோக்கிய உணவில் கவனம் செலுத்தினாலே படிப்படியாக உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஆரோக்கியமான தின்பண்டங்களை கொடுக்க வேண்டும்.

குறைவான ஊட்டச்சத்து மதிப்பை கொண்டுள்ள உணவுகளை அவர்களுக்கு கொடுப்பதை தவிர்த்து, காய்கறி மற்றும் பழங்களை அவர்கள் உணவும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளிடம் உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். நடைப்பயிற்சி, சைக்கிளிங், சுறுசுறுப்பான விளையாட்டுகள் போன்ற உடல் செயல்பாடுகளில் அவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.

குறிப்பாக அதிக எடை கொண்ட குழந்தைகளை தனிமைப்படுத்தாமல் இருக்க வேண்டும், இது மனச்சோர்வு மற்றும் தனிமைக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.     

மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US