நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 8000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஆறு மாவட்டங்களில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை 335 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன, மேலும் பல பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்றால் சேதங்கள் பதிவாகியுள்ளன.
மண்சரிவு எச்சரிக்கை
அவிசாவளையில் 17 வயது மாணவி ஒருவர் வடிகாலில் விழுந்து உயிரிழந்ததுடன், நாட்டின் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன.
வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்த 12 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன, அதேசமயம் மண்சரிவால் மலையக ரயில் போக்குவரத்து தடம் புரண்ட நிலையில், நாளை நண்பகல் வரை சேவைகள் வழமைக்கு திரும்பாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.