பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா!
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று (15) காலை ஒப்புக் கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தலைமையில் பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.
இத்திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ, பாலஸ்தீன அரசின் தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் ஆகியோர் கலந்துகொண்டதோடு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று நடைபெற்றது