ராஜபக்சர்களுக்கு பேரிடி; பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பணம் திரட்டி, காணி கொள்வனவு செய்ததாக கூறப்படும் வழக்கில் முன்னிலையாக தவறியதை அடுத்தே ப்ரவுன்ஸ்ஹில் வழக்கு தொடர்பில் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்
வழக்கின் பிரதிவாதியான பசில் ராஜபக்ஷ இன்றைய தினம் முன்னிலையாகாமை காரணமாகவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பசில் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பசில் ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதனால் அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டார் என வைத்திய அறிக்கைகளைச் சமர்ப்பித்துத் தெரிவித்தனர்.
எனினும், பசில் ராஜபக்ஷ தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சமூகமளிப்பதைத் தவிர்த்து வருவதனால், முன்வைக்கப்பட்ட காரணிகளை கருத்திற்கொண்டு, மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க, பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.