ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பு ; வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் ஆண்களே அதிக வாய்ப் புற்றுநோய்க்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க நியமிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் வயது வந்தவர்கள் பல் நோய்களால் பாதிக்கப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலைமைகளிலிருந்து குழந்தைகள் மற்றும் மக்களைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் சுகாதார கல்வித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக முன்கூட்டியே நோயைக் கண்டறியும் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் பாரிய ஒரு பிரச்சனையாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் உயர்தர சுகாதார சேவை செயல்பட்டு வருவதுடன் தற்போதைய பல் சம்பந்தமான மருத்துவத்தை அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மேலும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.