மக்களை ஏமாற்றவோ, திசைதிருப்பவோ எதிர்க்கட்சியால் முடியாது
நாட்டின் மக்களை இனியும் ஏமாற்றவோ, திசைதிருப்பவோ எதிர்க்கட்சியினரால் முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், மக்களை ஏமாற்றலாம் என எதிர்க்கட்சியினர் நினைக்கக்கூடாது என்றும், நாட்டின் மக்கள் ஏமாறும் அளவுக்கு முட்டாள்கள் அல்லர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளே கடந்துள்ள நிலையில், 76 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்ததைப் போன்று எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மக்களை ஏமாற்றி திசைதிருப்ப முயன்றால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.