சூரிய மின்சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு ; விவசாயிகள் ஐவருக்கு விளக்கமறியல்
திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் 05 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதவான் முன்னிலையில் 06 விவசாயிகள் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களில் 05 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை 05 விவசாயிகளும் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தநிலையில் ஒருவருக்கு மாத்திரம் பிணை வழங்கப்பட்டுள்ளது.
முத்துநகர் விவசாய பகுதியில் சூரிய மின்சக்தி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டத்திற்கு விவசாயிகளால் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், விவசாயிகள் சிலர் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்ட போது, அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஏனைய மூன்று பேரும் அவர்களின் வீடுகளில் இருந்தபோது கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.