இலங்கை அழகுக்கலை நிபுணர்களுக்கு லண்டனில் வாய்ப்பு!
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாடநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பொன்றினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அழகுத்துறையுடன் தொடர்புடைய பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடளுக்குப் பின்னரே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதிகொண்ட இப்பாடநெறியினை அழகுத்துறையுடன் தொடர்புடைய 4 பிரிவுகளின் கீழ் தொடரலாமெனவும் அவர் கூறினார்.
அத்துடன் சர்வதேச அங்கீகாரம் கொண்ட இப்பாடநெறியில் பிரித்தானிய விரிவுரையாளர்களிடம் சிங்களமொழிபெயர்ப்பு மூலமான விரிவுரைகளையும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.