கொட்டித்தீர்க்கும் கனமழையால் இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் திறப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் இன்று மாலை திறந்து விடப்பட்டுள்ளன.
இரணைமடு, முத்தையன்கட்டு ஆகிய நீர்த்தேக்கங்களின் நீரேந்து பகுதிகளில் பொழியும் கனமழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்துள்ள நிலையில் குறித்த இரு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளையும் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன்போது பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இரணைமடு, முத்தையன்கட்டு ஆகிய நீர்த்தேக்கங்களின் நீரேந்து பகுதிகளில் பொழியும் கனமழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக, குளங்களுக்கான நீர் வரத்து சடுதியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இவ்விரு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் மேலும் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படவுள்ளது.
எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.








 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        