கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை
கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்தபோது பாரியளவிலான நிதி மோசடி இடம்பெற்ற விடயம் தொடர்பான வழக்கில் இரண்டாவது சந்தேக நபராக கபில சந்திரசேனவின் மனைவி உள்ளார்.
இந் நிலையில் சந்தேக நபரான பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவைக் கைது செய்வதற்காக, கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று புதன்கிழமை (15) சர்வதேச பிடியாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

ஸ்ரீ லங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி ஆவார்.
சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், சர்வதேச பொலிஸார் உள்ளிட்ட வெளிநாட்டு விசாரணைகளுக்கான உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஆங்கில மொழி திறந்த பிடியாணை அவசியம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.