கொழும்பில் நடமாட இவர்களுக்கு மட்டுமே அனுமதி!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் கொழும்பில் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்ட வியாபாரிகளுக்கு மாத்திரமே நடமாடும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படும்.
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத யாரும் இந்த வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின்போது கொழும்பில் பொது மக்கள் நலநோம்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்குகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொழும்பில் கொரோனா தடுப்பூசி இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்ட வியாபாரிகளுக்கு மாத்திரமே நடமாடும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படும்.
கொரோனா இரண்டு கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத யாரும் இந்த வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டால், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் குறிப்பிட்டுள்ளார்.