இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி; பலர் காயம்!
கேகாலை மாவட்டம் வறக்காப்பொல, துல்ஹிரிய பகுதியில் இன்று புதன்கிழமை (02.07.2023) காலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளது .
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் கனரக வாகனமும் மோதியதில் 10 போர் காயமடைந்துள்ள நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
இரண்டாம் இணைப்பு
மேலும் மூவரின் நிலை கவலைக்கிடம்
வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் எதிர் திசையில் சீமெந்து கொண்டு சென்ற கனரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளானது.
மேலும் விபத்து தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.