பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழப்பு
எம்பிலிபிட்டிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
எம்பிலிபிட்டிய பனாமுர வெலிக்கடையாய பிரதேசத்திலேயே இத் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக் கைது செய்வதற்காக இன்று (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிகாாிகள் சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்துள்ள நபர்
சம்பவத்தில் முன்னாள் ராணுவ சிப்பாயான 22 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மினுவாங்கொடை பெஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் அம்பலாங்கொடையில் பிரதி அதிபர் ஒருவா் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.