பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் (01) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை
மினுவாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டடார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் நிறுத்த முயன்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பொலிஸ் உத்தரவை மீறி பயணித்துள்ள நிலையில் பொலிஸார் அவர்களை பின்தொடரந்து சென்றுள்ளனர்.
பின்னர் பொலிஸார் சந்தேக நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை செய்த போது சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரியிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.