நீரில் மூழ்கி ஒருவர் மாயம்; மற்றுமொரு நபர் உயிரிழப்பு
மாவரல, ஆந்தலுவ பாலத்துக்கு அருகில் நடந்து சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (14) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆந்தலுவ, கௌல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து ஈடுபட்டுள்ளதுடன் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த நபர்
இதேவேளை உடுதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீமுரே பிரதேசத்தில் சூரியாரண ஆற்றில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக உடுதும்பர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திபுலகஸ்பிட்டிய, மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.