யாழில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை பரிதாப பலி
யாழ்.பருத்தித்துறையில் பிறந்து 1 மாதமான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் குழந்தையின் இறப்பு தொடர்பில் இன்று சட்டவைத்திய அதிகாரியின் விசாரணை இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேற்படி குழந்தை வீட்டில் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. இதேவேளை குழந்தையின் தாய்க்கு கடந்த 22ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து நேற்றய தினம் குழந்தைக்கு பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
குழந்தையின் இறப்பு தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் சட்டவைத்திய அதிகாரி விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.