யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் நீராட சென்றவருக்கு இறுதியில் காத்திருந்த துயரம்
கீரிமலை கடலில் நீந்தியவேளை ஆணொருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக நேற்று (19) உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

உடற்கூற்று பரிசோதனை
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலை கேணியில் குளிப்பதற்காக வந்துள்ளார். ஏனையோர் கேணியில் குளித்தவேளை குறித்த நபர் கடலில் இறங்கி குளித்துள்ளார்.
இதன்போது தீடீரெ நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் சிறிது நேரத்தில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளின் பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.