தமிழர் பகுதியை மிரள வைத்த தனிநபர் ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
வென்னப்புவ, தும்மலதெனிய பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் தலைமறைவாக இருக்கும் திட்டமிட்ட குற்றக் குழுத் தலைவர்களின் போதைப்பொருள் வியாபாரத்தை இலங்கையில் முன்னெடுத்து வந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

மேலதிக விசாரணைகள்
சந்தேக நபர் டுபாயில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை முன்னெடுத்து வரும் ஹைடொப் துஷார என்பவரின் போதைப்பொருள் விநியோக முக்கிய உதவியாளர் எனத் தகவல் கிடைத்துள்ளது.
வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வென்னப்புவ - தும்மலதெனிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 120 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின், 53 கிராம் 610 மில்லிகிராம் ஐஸ் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் பெறுமதி 75 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்க நடவடிக்கை எ்டுக்கப்பட்டுள்ளது.