யாழ்ப்பாணத்தில் பெரும் துயரச் சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!
யாழ். அச்சுவேலி பகுதியில் குடல் அலர்ஜி நோயினால் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கபிலன் கபிசன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுவனுக்கு நேற்று முன்தினம் (21-06-2024) திகதியில் இருந்து வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுவன் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நேற்று (22-06-2024) அதிகாலை 4.00 மணியளவில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் குடல் அலேர்ஜி நோயினால் குறித்த மரணம் சம்பவித்ததாக தெரியவந்துள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.