யாழில் எரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது
நாடு தற்போது கடும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் எரிபொருளை சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
11 பீப்பாய்களில் எரிபொருளை சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 8 பேரல் மண்ணெண்ணெய், 2 பேரல் பெற்றோல் மற்றும் ஒரு பீப்பாய் டீசல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுடன் இணைக்கப்பட்டுள்ள கடையொன்றில் இருந்து இன்று இரவு எரிபொருள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் 500 ரூபா என்ற விலையில் பெற்றோல் விற்பனை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சுமார் 1,600 லீற்றர் மண்ணெண்ணெய், அண்ணளவாக 400 லீற்றர் பெற்றோலியம் மற்றும் அண்ணளவாக 200 லீற்றர் டீசல் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.