இந்தியாவிலும் நுழைந்தது ஓமிக்ரான்; வெளியானது அதிர்ச்சித்தகவல்!
இந்தியாவில் இருவருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய திரிபான ஓமிக்ரான், உலக அளவில் பரவக் கூடியது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இது முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான திரிபுகளை கொண்டுள்ளதாகவும், பெருந்தொற்றின் பாதையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் திரிபு தற்போது போட்ஸ்வானா, இத்தாலி, ஹாங்காங், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மனி, கனடா, இஸ்ரேல் மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இன்று 2 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கர்நாடகாவில் 66 மற்றும் 46 வயதினை சேர்ந்த 2 பேருக்கே இவ்வாறு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.