நாடுவிட்டு நாடு வேகமாக பரவும் ஒமிக்ரோன்....ஜெர்மனையும் விட்டுவைக்கவில்லை
தென்னாபிரிக்காவில் புதிய வைரஸான ஒமிக்ரோன் அடையாளம் காணப்பட்டு இரண்டு நட்களிலே தற்போது ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நாட்டின் பவேரியா பகுதியில் இரண்டு தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெஸ்ஸி என்ற பகுதியில் புதிய வைரஸ் தொற்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாகு இந்த தொற்றுகளானவர்கள் ஏற்கனவே இரண்டு தடுப்பூசி பெற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இஸ்ரேல், இத்தாலி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் இந்த புதிய வைரஸ் பரவி இருப்பதாக தெரியவருகிறது.