உலகையே தற்போது பீதியில் வைத்துள்ள ஓமிக்ரோன்: WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
தற்போது மிகவும் ஆபத்தானதாக கருதப்படும் ஓமிக்ரோன் வைரஸ் திரிபின் பரவல் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற ஓமீக்ரோன் வைரஸ், தென்னாபிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் திகதி முதன் முதலாக கண்டறியப்பட்டது.
இந்த ஒரு மாத காலத்தில் Omicron வைரஸானது, 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவிலும், ஆபிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஓமிக்ரோன் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஓமிக்ரோன் வைரஸின் பரவில் அதிகளவில் தொடர்வதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம் தென்னாபிரிக்காவில் இந்த Omicron தொற்றின் பாதிப்பு உச்சம் அடைந்து, தற்போது குறையத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஒருரே நாளில் 27,000 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 15, 424 ஆக குறைந்துள்ளது.