மீண்டும் உலகை மிரட்ட வரும் Omicron இன் துணை வைரஸ்! அறிவியலாளர்கள் பகீர் தகவல்!
Omicronஇன் துணை வைரஸான BA.2 sub-lineage of Omicron கடந்த ஆண்டு நவம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது Omicron வைரஸை விட வேகமாக வளர்வதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் துணை மாறுபாடு Omicron வைரஸை விட வேகமாக வளர்வதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சியாகிய UKHSA தெரிவித்துள்ளது.
மேலும், BA.2 இன் 426 பாதிப்புகள் இதுவரை பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அது Omicron வைரஸைவிட, அதிக தொற்றும் தன்மையுடையதாக இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும், அது Omicron வைரஸைவிட எவ்வளவு அதிக தொற்றும் திறன் கொண்டது என்பதை அறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளாரகள். இந்த துணை Omicron வைரஸை பிசிஆர் சோதனையில் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளதால், இது இரகசியமாக செயல்படும் வைரஸ் (‘Stealth Omicron) என்றும் அழைக்கப்படுகிறது.
இதனால், ஒருவருக்கு இந்த கொரோனா தொற்று இருந்தும், பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது. தொடர்ந்து இந்த BA.2 Omicron துணை மாறுபாடு வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அது Omicron வைரஸை விட தீவிர நோய்த்தொற்றை உருவாக்குவதாகத் தோன்றவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் வித்தியாசம் இல்லை என டென்மார்க் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். வைரஸ்கள் பரிணாமம் மற்றும் மாற்றமடைவது இயல்பு, எனவே புதிய மாறுபாடுகள் வெளிப்படுவதை நாம் தொடர்ந்து பார்ப்போம் என்று எதிர்பார்க்கப்படுகிறது UKHSA ஏஜென்சியின் இயக்குனர் டாக்டர் மீரா சந்த் கூறினார்.
அதிக எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் லண்டனில் 146ஆக உள்ளதுடன், இங்கிலாந்தின் தென்கிழக்கில் 97 பாதிப்புகள் பதிவானதாக UKHSA கூறியது. இந்த துணைப் பரம்பரையானது இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் விரைவாகப் பரவி வருகிறது.
எனினும் இதன் ஆரம்பகால அறிகுறிகள் ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் வளர்ந்து வருவதாகக் காட்டுகின்றன.
அதேவேளை BA.2 எங்கிருந்து தோன்றியது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் பிலிப்பைன்ஸில் முதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அதன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.