நாட்டில் வெளியாகவுள்ளது ஒமிக்ரோன் தொற்று அறிக்கை
உலக நாடுகளில் தற்போது மிகவும் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸினை கண்டறிய முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி பரிசோதனைகள் தொடர்பிலான அறிக்கை வார இறுதியில் வெளியாகிவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலினை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துரையின் தலைவர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளில் எந்தவொரு ஒமிக்ரோன் தொற்றாளர்களும் உறுதியாகவில்லை.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனைகளின் அறிக்கையை எதிர்வரும் இரு தினங்களில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
இதன்போது வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.