20 ரூபா பணம் கேட்டு புதிய மாணவனை தாக்கிய பழைய மாணவர்கள்
களுத்துறையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரக் கல்வியை கற்பதற்காக புதிதாக இணைந்த மாணவர் ஒருவரை அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்தோடு அம் மாணவன் காயமடைந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
சம்பவத்தின் காரணம்
தாக்குதலுக்கு இலக்கான மாணவனிடம் தாக்குதலை நடத்திய மாணவர்கள் 20 ரூபா பணம் கேட்டதாகவும் அதனை வழங்காமையினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் மாணவனின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைது செய்துள்ளனர்.