அமெரிக்காவிலிருந்து இலங்கையில் உள்ள பல நபர்களுக்கு அனுப்பட்ட பொதிகள்!
நீர்கொழும்பு பகுதியில் உள்ள கொடியர் சேவை நிலையத்தில் இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் தொகை ஒன்று கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது, சுமார் 70 மில்லியன் ரூபா பெறுமதியான 2,000 போதை மாத்திரைகள் மற்றும் 04 கிலோ குஷ், 300 கிராம் மெஜிக் காளான்கள் மற்றும் போதைப்பொருள் அடங்கிய சொக்லேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கை சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள கொரியர் சேவை நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அங்கு போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து கொழும்பு, மஹரகம மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்காக இந்தப் பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பின்னர் அவை போலி முகவரி என தெரியவந்தது.
குறிப்பாக சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது