நாட்டு மக்கள் பட்டினியில் தவிக்க 42 ஆயிரம் ரூபாவுக்கு 6 வெள்ளி கரண்டி கொள்வனவு செய்த அதிகாரி!
புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக உயர் அதிகாரியொருவர், உணவு உண்பதற்கு 42 ஆயிரம் ரூபா செலவு ஆறு கரண்டிகளை கொள்வனவு செய்துள்ளதாக பணியகத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அதிகாரி பயன்படுத்தும் கரண்டிகள் பழசாகி விட்டதால், இவ்வாறு புது கரண்டிகளை கொள்வனவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் ரூபா பெறுமதி
இதன்பிரகாரம் அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆறு கரண்டிகளை கொள்வனவு செய்த போதும் திருப்தியடையாத அந்த அதிகாரி , சிறந்த ரக கரண்டிகளை கொள்வனவு செய்யும்படி பணித்துள்ளார்.
இதையடுத்து அதிகாரிகள் வெள்ளி கலந்து தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் 6 கரண்டிகளை 42 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளதாக அவ்வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
You My Like This Video