விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி!
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
39 வயதான கென்யாவைச் சேர்ந்த பிரஜை ஒருவரே போதைப்பொருளை விழுங்கிக் கொண்டு நிலையில் கைதாகினார். நேற்று காலை டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த குறித்த பயணி விமான நிலையத்தில் எக்ஸ்-ரே ஸ்கான் சோதனைக்குட்படுத்திய போது, அவரது வயிற்றில் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
அது தொடர்பிலான மேலதிக விசாரணையில் அது கொக்கெய்ன் என அடையாளம் காணப்பட்டதாகவும், இதுவரை 17 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சமபவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.