போலி ஆவணங்களை தயாரித்த அதிகாரி கைது!
போலி அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை தயாரித்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி போல் செயல்பட்டு வந்த நபராருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பாணந்துறை - கோரகபொல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். பாணந்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கடந்த 03 ஆம் திகதி மாலை 6.58 மணியளவில் பாணந்துறை நகரத்தில் உள்ள பஸ் நிலையத்திற்கு முன்னால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 124 ஐ மீறி, குறித்த குற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையினடிப்படையில் குறித்த நபரிடமிருந்து போலி அடையாள அட்டைகள், முத்திரைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.